பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பம் – வணிகமாணி மாணவர்களுக்கான அறிவித்தல
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
பெயர் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு மட்டுமானது
வணிகமாணி மாணவர்களுக்கான அறிவித்தல மாணவர்களுக்கான அறிவித்தல்
மேற்படி வணிகமாணிக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்து 22.03.2025 அன்று நடைபெற்ற 39 வது பட்மளிப்பு விழாவில் பட்டத்தினை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பட்டச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அவர்களின் பெயர்கள் பின்வரும் இணைப்பில் (இணைப்பு 1) உள்ளவாறு அச்சிடப்படவுள்ளன.
ஏதேனும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்கள் மட்டும் (வலுவான காரணங்கள் உள்ளவர்கள் மட்டும்) கீழே வழங்கப்பட்டுள்ள இணையத்தள முகவரியில் (இணைப்பு 2) பதிவுகளை மேற்கொண்டு அதன் பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கப் பெற்ற உங்கள் பதிலளிப்பின் (google form) அச்சிட்ட பிரதி மற்றும் பெயர் மாற்றத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் 02/05/2025ற்கு முன்னர் நேரடியாக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையக் காரியாலயத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
30/04/2025