
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் ஆண்டுவிழா -2025 : துடுப்பாட்டப்போட்டி
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் 30ஆம் திகதி ஆவணி மாதம் 2025 சனிக்கிழமை அன்று சிறப்பாக ஆரம்பமாகியது. இதன் ஒரு நிகழ்வாக மாணவர்களுக்கிடையிலான் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது B.A , B.Com, BBM ஆகிய கற்கைநெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கிடையில் நடைபெற்றது. இதில் B.A கற்கைநெறியினைத் தொடரும் 1ஆம் 2ஆம் அணிகளில் இருந்து இரண்டு குழுக்கள் வீதமும் B.A-Batch III, B.Com, B.B.M ஆகிய அணிகளில் இருந்து ஒவ்வொரு குழுக்கள் வீதமும் போட்டியில் பங்குபற்றினர். இவர்களில் ஒவ்வொரு அணியிலும் குறிப்பாக 10ஆண்களும் 05 பெண்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் முதற்கட்ட சுற்றுப்போட்டியானது 20 ஆம் திகதி புரட்டாதி மாதம் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் ரொபின்சன், BCom ஒருங்கிணைப்பாளர் திரு.ந.உமாகாந்த் மற்றும் BBM ஒருங்கிணைப்பாளர் திரு.ச.பாலபுத்திரன் மற்றும் விளையாட்டுத்துறைப் பொருப்பாளர் கலாநிதி.திரு.கே.கேதீஸ்வரன்அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இதன் தொடக்க நிகழ்வாக ஒவ்வொரு அணிகளும் தங்களது குழுக்களின் அங்கத்தவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு அணிகளுக்குமான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக இச் சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியானது B.B.M XII VS B.com VI ஆகிய அணிகளுக்கு இடையில் மிகச்சிறப்பாக ஆரம்பமாகியது. தொடர்ந்து ஒவ்வொரு குழுக்களுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்று கால் இறுதிப்போட்டிக்கு BCom (Batch VI) B.A Batch II (B), B.Com (Batch V), B.B.M (Batch XII) ஆகிய நான்கு அணிகளும் தகுதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுற்றுப்போட்டிகளின் அடிப்படையில் அரையிறுதிக்கு B.Com (Batch VI), B.Com (Batch VIII), B.A (Batch II – A), B.B.M XIV ஆகிய நான்கு அணிகளும் தெரிவாகின. அத்துடன் இப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சக மாணவர்களும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதுடன் மாணவர்கள் தங்களது அணிகளுக்கு இடையில் பரஸ்பர தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. மாணவர்களான அனைவரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளானது ஐப்பசி மாதம் 4ஆம் திகதி 2025 சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய தினத்தில் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளோடு ஏனைய சில விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், அஞ்சலோட்டம், கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் இத்தனத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதன்படி கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி சுற்றானது 04.10.2025 பி.ப 01.00 மணி அளவில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அரை இறுதிச் சுற்றின் முதலாவதுப் போட்டியானது B.Com VI மற்றும் B.Com VIII எட்டு ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் B.Com VI அணியானது 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. அடுத்த அரை இறுதிப்போட்டியானது BA II ( A Team) மற்றும் BBM XIV ற்கும் இடையில் இடம்பெற்றது. இப்போட்டியின் இறுதியில் BA இரண்டாம் அணியின் குழு A வானது ஒன்பது விக்கட்டுகளால் வெற்றியைத் தனதாக்கி கொண்டு இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதியை பெற்றுக் கொண்டது.
இக்கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப்போட்டியானது BA II ( Team A) மற்றும் BCom VI அணிகளுக்கு இடையில் சுமார் பி.ப 03.30 மணி அளவில் அநேக மாணவர்களின் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமாகியது. மிகவும் விறுவிறுப்புடன் தொடங்கிய இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற BA இரண்டாம் அணியின் குழு A ஆனது களத்தடுப்பினை முதலாவது தெரிவு செய்தது. B.Com VI அணி துடுபாட்டத்தில் களமிறங்கியது. துடுப்பாட்டத்தின் இறுதியில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களை BCom VI அணியானது பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 34 ஓட்டங்கள் என்ற இலக்கினை அடிப்படையாகக் கொண்டு துடுப்பாட்டத்தில் களமிறங்கிய BA II Team A ஆனது சிறப்பாக விளையாடி ஒன்பது விக்கட்டுகளால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அந்த வகையில் இரண்டு நாட்களாக 12 அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற இத்துடுப்பாட்ட போட்டியில் இறுதி வெற்றியாளராக BA இரண்டாம் அணியின் A ஆனது தெரிவு செய்யப்பட்டது. திறந்த மற்றும் தொழில் கல்வி நிலையத்தின் வரலாற்றில் இவ்வாறான துடுபாட்ட போட்டி இடம் பெற்றுமை இதுவே முதல் தடவையாகும். இதில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு வெற்றி பெற்ற அணிக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் CODL ஆனது மகிழ்ச்சி அடைகிறது.