
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் காத்திருப்பு மண்டப திறப்பு மற்றும் இரத்ததான முகாம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கான காத்திருப்பு மண்டபமானது 30.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, எமது நிலைய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாக இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியிருந்தனர். இம்முகாமில் தன்னார்வ தொண்டர்கள் 57 பேர் பங்குபற்றி வெற்றிகரமாக 52 பேர் இரத்ததானம் செய்திருந்தனர். தேவையுடையோருக்கு உயிர் கொடுக்கும் இந்த உயர்ந்த செயலில் பங்களிப்பு செய்த அனைவரையும் நாங்கள் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். இந்நிகழ்வை சிறப்பிக்க பொருளாதார பங்களிப்பு செய்த அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.