Back

உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி – அணி –II – கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Closing Date:  09.02.2026 (திங்கட்கிழமை)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி
(அணி –II)

மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்

விண்ணப்பதாரி கீழ்வரும் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  1. க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி.
  2. பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

கற்கைநெறிக் காலம்
ஒரு வருடம் (இரண்டு அரையாண்டுகள்-வார இறுதி நாட்கள்)

மொழிமூலம்
தமிழ்

கற்கைநெறிக் கட்டணம்
ரூபா 55,000.00

விண்ணப்பப்படிவக் கட்டணம்
 ரூபா 1000.00

 

விண்ணப்பிக்கும் முறை

திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில். நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் மற்றும் கொடுப்பனவுச்சீட்டினை உள்ளீடு செய்வதன் மூலம்; விண்ணப்பத்தினை மேற்கொள்ள முடியும்;. (விண்ணப்ப கட்டணத்திற்கான கொடுப்பனவை எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும்; (890022780003452) எனும் வங்கி கணக்கிலக்கத்திற்கு விண்ணப்ப கட்டணமாக 1000.00 ரூபாவினை செலுத்தி மேற்கொள்ள முடியும்.)

விண்ணப்பித்தமையினை உறுதி செய்ய, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் (Submitted Application Form) தங்களது மின்னஞ்சலுக்கு பதிலளிப்புடன் அனுப்பப்படும். அப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி (Original) மற்றும் கல்வி,தொழில் சான்றிதழ்களின் பிரதிகளுடன் 09.02.2026 (திங்கட்கிழமை) அல்லது அதற்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் (Registered Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி- அணி II’ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

நிகழ்நிலை விண்ணப்பப் படிவம்

பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி

பிரதிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

19.01.2026