வணிகமாணிக் கற்கைநெறி – வெளிவாரிப் பரீட்சை விண்ணப்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
வணிகமாணிக் கற்கைநெறி
Fourth Examination in Commerce -2022 Second Semester
மேற்படி பரீட்சையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஆனி மாதமளவில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் CODL-SIS இணையத்தளத்தில் (https://www.odsis.jfn.ac.lk)விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 17.05.2025 (சனிக்கிழமை) பின்னிரவு 11.59 ஆகும்.
பரீட்சைகளுக்கு தோற்றும் மீள் பரீட்சார்த்திகள் பாட அலகு ஒன்றிற்கு ரூபா 1500.00 வீதம்
890002080003097 என்ற மக்கள் வங்கி கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்து கொடுப்பனவுச்சீட்டின் பிரதியினை இணைத்தல் வேண்டும். அத்துடன் கொடுப்பனவுச்சீட்டின் மூலப்பிரதியினை ((Original Slip)) 21.05.2025 (புதன்கிழமை) அல்லது
அதற்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் (Registered Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கொடுப்பனவுச் சீட்டின் பின்புறத்தில் தங்களது பதிவு இலக்கம் (Registration Number) முழுப்பெயர் மற்றும்
விண்ணப்பித்த பாட இலக்கம் (Unit Code) என்பவற்றை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
சிரேக்ஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் (0212223612)/ (0750271139) என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
Note : மாணவர்கள் தமது முழுமையான தவணைக் கொடுப்பனவினை செலுத்திய பின்னரே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
சிரேக்ஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
03.05.2025.