புதிய அனுமதிக்கான விண்ணப்பம் – 2025 – வணிகமாணி சிறப்பு பட்டப்படிப்பு அணி – IX (2023/2024)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
வணிகமாணி சிறப்பு பட்டப்படிப்பு – 2023/2024
Bachelor of Commerce Honours Degree Programme – 2023/2024
புதிய அனுமதிக்கான விண்ணப்பம் – 2025 – அணி – IX
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த நான்கு வருட கால வணிகமாணி சிறப்புக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள்:
- க.பொ.த. (உஃத) பரீட்சை (வணிகப்பிரிவு) – 2023 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியானவர்கள். (பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30மூ ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.)
அல்லது - பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு சமமான தகைமையைக் கொண்டவர்கள்
வணிகமாணியில் பாட அலகுகளிற்கான விலக்களிப்புக் கோருதல்:
வணிகமாணி கற்கை நெறியில் காணப்படும் பாட அலகுகள் அல்லது அதற்குச் சமனான பாட அலகுகளை உள்ளடக்கிய கற்கை நெறிகளில் சித்தியடைந்தோர், உரிய தகைமைகளைக் குறிப்பிட்டு விலக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அவர்கள் தகைமை பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பாட அலகுகளிற்கான விலக்களிப்பு அனுமதிக்கப்படும்.
மாணவர் தெரிவு:
விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் (Z-score) அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது மூன்றின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள். பொது உளச்சார்புப் பரீட்சைக்கான தேவை ஏற்படின் பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்:
விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 890092080000060 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி இணைய முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி Application Link எனும் இணைப்பின் ஊடாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
விண்ணப்ப முடிவுத்திகதி :
21.07.2025 (திங்கட்கிழமை) (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
மேலதிக விபரங்களை 021 222 3612 என்ற தொலைபேசி எண்ணூடாக அல்லது www.codl.jfn.ac.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுகொள்ளலாம்.
புதிய அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்
- 1. இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
- 2. மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) ஒரேPDF கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும். (குறித்த கோப்பின் அளவானது 10MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்)
- தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உ/த) பரீட்சை – 2023 அல்லது அதற்கு முற்பட்ட அதிகூடிய பெறுபேற்றுச் சான்றிதழ்)
அல்லது - க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சமனான அல்லது அதற்கு மேலான கல்வித்தகைமைச் சான்றிதழ்
- விலக்களிப்புக் கோருவதாயின் அதற்கான கல்வித்தகைமைச் சான்றிதழ்
- 3. இணைப்பிற் காணப்படும் கொடுப்பனவுச்சீட்டினை (Payment Voucher) பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 890092080000060 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதியினை வங்கி அதிகாரியினால் உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுச்சீட்டு நகல் செய்யப்பட்டு (Scan) பதிவேற்றப்படல் வேண்டும்.
- 4. மாணவர்கள் விண்ணப்பித்தமையினை உறுதி செய்ய, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் (Submitted Application Form) மற்றும் விண்ணப்பக் குறிப்பிலக்கத்துடன் (Reference No.) கூடிய மின்னஞ்சல் பதிலளிப்பு அனுப்பப்படும் அப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின்( இல 03 இல் குறிப்பிட்ட) மூலப்பிரதியினை (Original) இணைத்து 21.07.2025 (திங்கட்கிழமை) அல்லது அதற்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் (Registered Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘வணிகமாணிச் சிறப்புப் பட்டப்படிப்பு – அணி IX (2023ஃ2024)’ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம். - 5. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான மேலதிக அறிவித்தல்கள் அனைத்தும் எமது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் www.codl.jfn.ac.lk பிரசுரிக்கப்படும்.